பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

அடைபட்ட சிறுமி
    அந்தச் சிறுமி நல்ல கெட்டிக்காரி எல்லாப் பாடங்களையும் நன்றாகத்தான் படித்தாள். ஆனாலும், ஆங்கிலப் பாடத்தில் மட்டும் அவள் கொஞ்சங்கூட அக்கறை செலுத்தவில்லை; அலட்சியமாகவே இருந்தாள்.
    இப்படி அவள் இருப்பது அவளுடைய அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது அவளுக்கு ஆங்கிலத்திலே ஆர்வம் ஏற்படச் செய்ய வேண்டுமென்று எண்ணனார். தினமும் மகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்துவந்தார். ஆனாலும் பலன் இல்லே! 
    எத்தனை நாட்களுக்குத் தான் அவர் இப்படி பொறுமையாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் அவருடைய பொறுமை பறந்து விட்டது? கோபம் அளவுக்கு மீறி வந்துவிட்டது. உடனே, அந்தச் சிறுமியைப் பிடித்து ஓர் அறைக்குள்ளே தள்ளிக் கதவை அடைத்து விட்டார். அன்று முழுவதும் அவள் உள்ளேயே இருந்தாள்.
     ஆனால், அப்பா கொடுத்த தண்டனை வீண்போகவில்லை. சிறுமி அறையை விட்டு வெளியில் வந்ததும் ஆங்கிலத்தில் அக்கறை செலுத்த ஆரம்பித்தாள். அன்று முதல் அப்பாவுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகினாள். ஆங்கில ஆசை நாளுக்கு நாள் நன்கு வளர்த்தது.
    ஒரு நாள் கணிதத்தில் சில கேள்விகளுக்கு விடை எழுத வேண்டியிருந்தது. யோசித்து யோசித்துப் பார்த்தாள். கணக்குக்கு விடை தெரியவில்லே. அப்போது, திடீரென்று அவளுக்கு ஏதோ தோன்றியது. மனத்திலே தோன்றியதை அப்படியே அவள் எழுதிவிட்டாள்.

அப்படி அவள் என்ன எழுதினாள்? கணக்குகளுக்கு விடையா? இல்லை, இல்லை. ஒர் அழகான ஆங்கிலப்

25