பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடலைத்தான் எழுதினாள். அந்த அழகான பாடலை இயற்றியவர் யார், தெரியுமா? வேறு யாரும் அல்ல, அந்தச் சிறுமியேதான்! ஆம், பதினோராவது வயதிலை அவள் பாட்டுக் கட்ட ஆரம்பித்தாள்! பதின்மூன்றாவது வயதில் ஆயிரத்து முந்தூறு வரிகளில் ஒரு நீண்ட கவிதையையும், இரண்டாயிரம் வரிகளில் ஒரு நாடகத்தையும் எழுதி எல்லாரையும் ஆச்சரியத்திலே ஆழ்த்திவிட்டாள்!

    'அடேயப்பா! அந்த வயதிலே அப்படிப் பாட ஆரம்பித்தவன் பெரியவளானதும் எப்படி எப்படியெல்லாம் பாடியிருப்பாள்!' என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

    பெரியவளானதும் அவள் எழுதிய பாடல்கள் எத்தனை எத்தனையோ! வை தேன்போல் இனிக்கின்றன' என்றார்கள் சிலர். 'தேசபக்தியை வாட்டுகின்றன' என்றார்கள் வேறு சிலர். இன்னும் சிலர், 'ஏழை எளியவர்களைப் பற்றி எவ்வளவு அற்புதமாகப் பாடியிருக்கிறாள்!' என்று பாராட்டினார்ள். கடைசியி்ல் எல்லாரும் சேர்ந்து 'இந்தியாவின் கவியரசி' என்று புகழ ஆரம்பித்துவிட்டார்கள்.

    இந்தியாவின் கவியரசியாகவும், உலகம் போற்றும் கவிக் குயிலாகவும் விளங்கிய அந்த அம்மையார் சரோஜினி தேவிதான்!26