பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஒடிப் போனவன்
    அந்தக் கிராமத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது அங்கே தமிழ்மட்டுமே சொல்லிக்கொடுத்து வந்தார்கள். ஆங்கிலம் படிக்க வேண்டுமானால், அயலூருக்குத்தான் போகவேண்டும்.
    அதே கிராமத்தில் ஒரு பணக்காரர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். மகனுக்குத் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்துவிட்டது. இனி, ஆங்கிலம் கற்க வேண்டும். அவர் தம்முடைய மகனே ஆங்கிலம் கற்க அயலூருக்கு அனுப்பவில்லை. அந்த ஊரிலேயே மகனுக்காக ஒரு புதிய ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். அதில் மகனைப் படிக்க வைத்தார். அவனுடன் சேர்ந்து சிலரும் படித்தார்கள்,
    "நம்முடைய மகன் நன்றாகப் படிக்கவேண்டும்; உயர் நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அப்பா அப்படிச் செய்தார். ஆனால், மகனோ சரியாகப் படிப்பதில்லை. பள்ளிக்கூடத்துக்கே சரியாகப் போவதில்லை. ஊர் சுற்றியாக இருப்பான். அப்பா வேண்டியவரை சொல்லிப் பார்த்தார்; பயனில்லை!
    ஒரு நாள் அப்பா கோபத்தில் அவனை நன்றாக அடித்து விட்டார்; எத்தனையோ முறைகள் அவன் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறான். ஆனாலும், அன்று விழுந்த அடிகளை அவனால் தாங்க முடியவில்லே; உடனே அவனுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டது. இனி, இந்த வீட்டில் ஒருவிநாடி கூட இருக்கப் போவதில்லை. இதோ கிளம்புகிறேன்’ என்று கூறிக் கொண்டே வெளியேறினான். நேராக ஒரு நாவிதரிடம் சென்றான். தலையை மழுங்க மொட்டை அடித்துக் கொண்டான். உடுத்தியிருந்த உடைகளே உதறி எறிந்துவிட்டு, கட்டிய கோவணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டே புறப்பட்டு விட்டான்!27