பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஊர்ஊராகச் சுற்றனான். கால் வலிக்க அலைந்தான். சரியான சாப்பாடில்லே. நல்ல தூக்கமில்லே. பாவம், எத்தனே நாட்களுக்குத்தான் இப்படி இருக்க முடியும்? வயிறு காய்ந்தது. உடல் இளைத்தது. மனம் மாறியது. உடனே, வீடி திரும்ப வேண்டுமென்ற ஆசை தோன்றியது. ஆனாலும், தேராக வீடு செல்ல அவன் தயங்கினான். அப்பாவுக்குக் கடிதம் எழுதவும் மனம் வரவில்லை. யோசித்தான்.

    பிறகு, தனது கிராமத்திலிருக்கும் நண்பன் ஒருவனுக்குத் தன்னுடைய கஷ்டங்களையெல்லாம் விளக்கி ஒரு கடிதம் எழுதினான். 'இந்தக் கடித்தத்தை நண்பன் நம் அப்பாவிடம் காட்டுவான். உனடே அவர் கட்டாயம் உங்கு வருவார்; வந்து அழைத்துக் கொண்டு போவார்' என்பது தான் அவனுடைய எண்ணம். அவன் எண்ணம் வீண் போகவில்லை. அது போலவே நடந்தது! நண்பன் மூலம் செய்தியை அறிந்ததும், கனைக் காணாமல் ஏங்கி இருந்த அப்பா ஆவலாக ஓடோடி வந்தார்; மகனைக் கண்டார்; கட்டித் தழுவிக் கண்ணீர் சொரிந்தார். அன்றே இருவரும் ஊர் திரும்பினர்.
    நல்லவைளை அந்த மகன் அப்படியே துறவியாய்ப் போயிருந்தால், அவன் பிற்காலத்தில் எப்படி ஆகி இருப்பானோ? ஒரு வேளை சாது சிதம்பரமாகியிர்க்கலாம், அல்லது, யோகி சிதம்பரமாகியிருக்கலாம், ஆனால், தென்னாட்டுத் திலகராகவோ, கப்பலோட்டிய தமிழனாகவோ, தேச பக்தர் வ.உ. சிதம்பரம்பிள்ளையாகவோ விளங்கியிருக்க முடியுமா?28