பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13 வகுப்பிலே கிளர்ச்சி

    அப்போது கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் சரித்திரப் பேராசிரியராக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவர் பெயர் சி. எப். ஒட்டன் என்பது. அவர் எப்போதும் இந்தியர்களைப் பற்றி இழிவாகவே பேசுவார்.

ஒரு நாள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது அவர் வங்காளிகளைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசிவிட்டார். சார், இந்த மாதிரி பேசுவது அழகல்ல. எங்கள் மனத்தைப் புண்படுத்தாதீர்கள் என்று அவரிடம் மாணவர்கள் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், அவர் மாணவர்களின் பேச்சை மதிக்கவில்லை. திரும்பத் திரும்ப வங்காளிகளைக் கேவலப்படுத்தியே பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சைக் கேட்கக் கேட்க மாணவர்களின் உள்ளம் கொதித்தது. ஆத்திரம் கொண்டார்கள். கட்டுப்பாடாக எல்லாரும் வகுப்பைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.

    மாணவர்களின் கிளர்ச்சியைக் கண்டு ஒட்டன் திடுக்கிட்டார். கல்லூரி அதிகாரிகள் திகைத்தார்கள். கடைசியில், இந்தக் கிளர்ச்சியை ஆரம்பித்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் யார் யார் என்று கண்டு பிடித்தார்கள். அவர்களுக்கு உடனே அபராதம் விதிக்கவில்லை; அல்லது சில நாட்களுக்கு அவர்கள் கல்லுரரியில் கால் எடுத்து வைக்கக் கூடாது என்றும் உத்தரவு போடவில்லை. வேறு என்ன செய்தார்கள்? அவர்களை அந்தக் கல்லூரியை விட்டே நீக்கிவிட்டார்கள்! அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு வேறு எந்தக் கல்லூரியிலுமே அவர்கள் சேர முடியாதபடியும் செய்து விட்டார்கள்:

அப்படி நீக்கப்பட்ட மாணவர்களில் நமக்கு மிகவும் வேண்டிய ஒர் இளைஞனாம் இருந்தான். கல்லூரியை விட்டு நம்மை நீக்கிவிட்டார்களே! என்று அவன் கவலைப்படவில்லை. “மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் திரும்பவும் கல்லூரியில் சேர்த்துக் கொள்வார்கள்’’ என்று சிலர்

29