பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவனிடம் கூறினார்கள். ஆனால், அவன் அதற்கும் தயாராக இல்லை. ஒரு வெள்ளைக்காரர் நம் நாட்டவரைப் பற்றிக் கேவலமாக நம்மிடமே பேசுகிறார். அதைக் கேட்டுக் கொண்டு மரக்கட்டை மாதிரி நாம் சும்மா இருப்பதா? அவரது போக்கைக் கண்டிக்கவே நாங்கள் கிளர்ச்சி செய்தோம். நாங்கள் செய்ததில் தவறே இல்லை' என்றான் அந்த இளைஞன்.

    அத்துடன் அவன் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டுச் சும்மா இருக்கவில்லே. இரண்டு ஆண்டுகள் சென்ற பிறகு, திரும்பவும் கல்லூரியில் சேர்ந்தான்; அக்கறையுடன் படித்தான்; பி. ஏ. வகுப்பில் தேறனான். பிறகு இங்கிலாந்து சென்றான், ஐ. ஹி, எஸ். படித்தான். அதிலும் தேறிவிட்டான். ஐ. வி. எஸ். பட்டம் பெற்ற போது அவனுக்கு வயது இருபத்து மூன்றுதான்!
    'ஐ. ஸி. எஸ். படித்தவர் என்றாலே, ஆண்டவனுக்கு அடுத்தவர் என்று நினைக்கும் காலம் அது. ஆனால், அந்த இளைஞன் பணத்தைப் பற்றியோ, பதவியைப் பற்றியோ கவலைப்படவில்லை. பம்பாய் வந்து இறங்கியதும். உடனே விடுதலைப் போரில் குதித்து விட்டான்! பல முறை சிறை சென்றான் பல முறை நாடு கடத்தப்பட்டான்; வாழ்நாள் முழுவதையும் தேசத்துக்காகவே அர்ப்பணம் செய்தான்.
    அந்த இளைஞன்தான் 'ஜெய் ஹிந்த்' என்னும் மந்திரத்தைத் திக்கெல்லாம் முழங்கச் செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!