பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மூன்று பூச்சிகள்
    'பள்ளிக்கூடத்துக்குச் செல்ல வேண்டும்; பாடங்களே ஒழுங்காகப் படிக்கவேண்டும்; பரீட்சைகளில் தேற வேண்டும்; பட்டங்கள் பெறவேண்டும் என்ற எண்ணமெல்லாம் அந்தப் பையனுக்கு இல்லை. அப்பா அம்மா கட்டாயப்படுத்துகிறார்களே என்றுதான் அவன் பள்ளிக்கூடம் போய்வந்தான். ஆசிரியர்கள் சொல்வதை அவன் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. எப்போதும் ஏதாவது யோசனை செய்து கொண்டே இருப்பான். இதனால், ஆசிரியர்கள் எல்லாரும் அவனை மக்கு: என்றார்கள். மாணவர்கள் எல்லாரும் 'பைத்தியம்' என்றார்கள்.
    பள்ளிக்கூடம் விட்டதும் அவன் நேராக வீட்டுக்கு வர மாட்டான். காடு மேடுகளில் சுற்றிக்கொண்டே திரிவான். வண்டு, வண்ணாத்திப் பூச்சி, விட்டில், வெட்டுக்கிளி இப்படிப்பட்ட பூச்சிகளைப் பிடிப்பதில் அவனுக்கு அளவில்லாத ஆனந்தம். அந்தப் பூச்சிகளைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டு வருவான். அவை எப்படி இருக்கின்றன, என்ன என்ன செய் கி ன் ற ன, எது எதைத் தின்கின்றன என்றெல்லாம் கவனிப்பான்.
    அவனிடத்திலே ஒரு புத்தகம் இருந்தது. அதில் எல்லா விதமான பூச்சிகளின் படங்களும் அச்சிடப்பட்டிருந்தன. அந்தப் பூச்சிகளில் பெரும்பாலான பூச்சிகளே அவன் பிடித்து விட்டான். ஒரு பூச்சியைப் பிடித்தவுடன், அந்தப் பூச்சியின் படம் எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்ப்பான், அந்தப் படத்தின் அடியில், என்னால் பிடிக்கப்பட்டது என்று எழுதி, பிடித்த தேதியையும் குறித்து வைப்பான். இப்படி அந்தப் புத்தகத்தில் அநேகமாக எல்லாப் படங்களின் அடியிலும் எழுதி வைத்திருந்தான்.

ஒருநாள், அவன் ஒரு பழைய மரத்தின் பட்டையை உரித்தான். உள்ளே அபூாவமான இரண்டு பூச்சிகள்

31