பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போய் இறங்கிவிடும்! ஆம், இப்படியெல்லாம் பல்லக்கில் உட்கார்ந்தபடியே அவன் கற்பனை செய்து பார்ப்பான்! நேரம் போவதே தெரியாது. மணிக்கணக்காகப் பல்லக்கில் உட்கார்ந்தபடி அவன் கற்பனை செய்து கொண்டேயிருப்பான்.

    அவனுடைய கற்பனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. கற்பனை வளர வளர அவனுக்குக் கவிதை எழுதும் திறமையும் ஏற்பட்டது. பதினேராவது வயதிலே அவன் அற்புதமாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டான்! பிறகு அவன் எத்தனையோ கவிதைகள் எழுதினான். அந்தக் கவிதைகளெல்லாம் உலகம் முழுவதும் பரவின. அவன் எழுதிய கீதாஞ்சலி என்ற கவிதைப் புத்தகத்துக்கு நோபல் பரிசும் கிடைத்தது.
    'அப்படியானால் அந்தப் பையனின் பெயர் எங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே!’ என்றுதானே கேட்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
    இரவீந்திரகாத தாகூர் என்றால், யாருக்குத்தான் தெரியாது!34