பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

பறக்கும் பல்லக்கு
    வீட்டு வராந்தாவிலே ஒரு பல்லக்கு இருந்தது. அது நிகவும் பெரிய பல்லக்கு. முன் பக்கம் எட்டுப்பேர், பின்பக்கம் எட்டுப்பேர் சேர்ந்து அதைத் தூக்குவார்கள். தூக்குகிறவர்கள் சிவப்பு பனியன் போட்டுக் கொண்டிருப்பார்கள். கையிலே காப்பு,காதிலே கடுக்கன்முதலிய அலங்காரத்துடன் பல்லக்கைத் தூக்கிச் செல்வார்கள். ஆனால், இதெல்லாம் ஒரு காலத்தில்தான். இப்போது யாரும் அதைத் தூக்குதில்லை. அதனால்தான் அது வராத்தாவில் தூங்கிக் கொண்டு இருந்தது. பாட்டி காலத்துப் பல்லக்கு என்று எல்லாரும் அதைச் சொல்லி வந்தார்கள்.
    பல்லக்கின் மேலிருந்த மெருகெல்லாம் போய்விட்டது. வர்ணங்களும் மங்கிப் போயிருந்தன. உள்ளேயிருந்த மெத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழிந்து கொன்டிருந்தது. மெத்தைக்குள்ளிருந்த தேங்காய் நார்களும் வெளியிலே தலைகாட்ட ஆரம்பித்தன!
     பாவம், அந்தப் பல்லக்குக்கு இப்போது மதிப்பே இல்லை. ஒருவர்கூட அதைக் கவனிப்பதில்லை. 'ஒருவர்கூட' என்றா சொன்னேன்? தப்பு, தப்பு: ஒரே ஒரு பையன்மட்டும் அதை அடிக்கடி கவனித்து வந்தான். கவனித்து வந்ததோடல்ல; ஓடிப்போய் அதற்குள் அடிக்கடி உட்கார்ந்தும் பொழுது போக்கி வந்தான். அதற்குள் எப்படிப் பொழுது போகும்?
    பல்லக்கில் ஏறி உட்கார்ந்ததும், அவனுக்குத் தான் படித்த கதைகளெல்லாம் ஞாபகத்துக்கு வந்துவிடும். உடனே அந்தப் பல்லக்குத் திடீரென்று வானத்திலே பறந்து செல்லும்! மறு நிமிஷம், ஒர் அழகான தீவிலே இறங்கிவிடும்! பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஒரு பெரிய மலை மேலே ஏறி நிற்கும்! அங்கும் அதிக நேரம் நிற்காது. சிறிது நேரத்தில் அதை விட்டுப் புறப்பட்டு நேராக ஒரு காட்டுக்குள்ளே33