பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'என்ன! எடுக்க முடியுமா, முடியாதா?" என்று அந்தப் பள்ளிக்கூடமே கிடுகிடுக்கும்படி உரத்த குரலில் கேட்டார் உபாத்தியாயர்.

    'ஐயா! தோல்களைப் போட்டவர் யார் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையாகச் சொல்கிறேன். நான் போடவே இல்லை. குற்றம் செய்யாதபோது எதற்காக எனக்குத் தண்டனே? தோல்களே நான் எடுத்தால் நானும் வேர்க்கடலை தின்றதாகத் தானே அர்த்தம்? அதனால்தான் எடுக்கவில்லை. எடுக்க முடியாது' என்று அழுத்தமாகக் கூறனான் அவன்!
    இதைக் கேட்டதும் உபாத்தியாயர் அப்படியே அசந்து போய்விட்டார்! அவரது கையிலிருந்த பிரம்பும் மெதுவாகக் கீழே இறங்கியது. அவன் கூறியது உண்மைதான் என்பதை அறிந்துகொள்ள அவருக்கு அதிக நேரம் ஆகவில்லே. பேசாமல் திரும்பிப் போப் இடத்திலே உட்கார்ந்து விட்டார்.

உபாத்தியாயரிடம் அவ்வளவு தூரம் துணிவுடன் பேசி உண்மையை உணரச் செய்த அந்த மாணவன் யார் தெரியுமா? 'சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்’ என்று வீரகர்ஜனை புரிந்த லோகமான்ய பால கங்காதர திலகரேதான்!

36