பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

வகுப்பிலே கடைசி
    1642-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினம். அந்த தினத்தில் இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது, 'கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால், மிகுந்த கீர்த்தியுடன் விளங்கப்போகிறது!’ என்று அப்போது சிலர் பேசிக் கொண்டார்கள். அதனைக் கேட்டுப் பிள்ளையின் அம்மா பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
    வயது வந்ததும், அந்தப் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், அவன் பள்ளிக்குச் சரியாகப் போகமாட்டான்; பாடத்தை ஒழுங்காகப் படிக்க மாட்டான். இதனால், வகுப்பிலே கடைசி என்று அவனுக்கு மற்ற மாணவர்கள் பட்டப் பெயர் சூட்டி விட்டார்கள். படிப்புத்தான் இல்லை. பலமாவது இருக்கக் கூடாதா? அதுவும் இல்லை. துரும்புபோல் இருந்தது அவனது உடம்பு. 
    ஒரு நாள், அந்தச் சிறுவனை அவனது வகுப்பிலே படித்த ஒரு முரட்டுப் பையன் வம்புக்கு இழுத்தான். சிறுவன் முதலில் பேசாமல்தான் இருந்தான். ஆனால், அந்த முரடன் சும்மா இருக்கவில்லை. கைநீட்ட ஆரம்பித்து விட்டான். உடனே, டேய், பேசாமல் போகிறாயா? அல்லது திருப்பித் தரட்டுமா?’ என்று சிறுவன் கோபமாகக் கேட்டான்.

"அடேயப்பா ஆளப்பார்த்தாலே தெரிகிறதே! நான் ஒரு தட்டு தட்டினால், நீ ஒன்பது குட்டிக்கரணம் போடுவாய், ஜாக்கிரதை' என்றான் முரடன். 'எங்கே, தட்டு பார்க்கலாம்' என்றான் சிறுவன். உடனே முரடன் கையால் தட்டவில்லை; காலால் அச்சிறுவனின் வயிற்றிலே உதைத்து விட்டான்! வயிற்றில் உதை விழுந்ததும், சிறுவனுடைய கோபம் அதிகமாகி விட்டது. ஒரே பாய்ச்சலாக அந்த முரடன்மேல் பாய்ந்தான். அவனைப் பிடித்து 'மடேர்' என்று எதிரிலிருந்த37