பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருக்கும்போது திடீரென்று அந்தப் பையனுக்கு ஒரு வருத்தம் வந்துவிடும். அது என்ன வருத்தம்?

    'இந்தப் பிறந்த நாள் ஆண்டுக்கு ஒரு முறைதானே அடிக்கடி வரவில்லையே! என்று எண்ணி வருந்துவானாம்.
    அந்தப் பையன் நினைத்ததுபோலவே அவனுடைய பிறந்தநாள் அடிக்கடி வருவதாயிருந்தால், குழந்தைகள் தினமும் நம் நாட்டில் அடிக்கடி கொண்டாடப்படும் அல்லவா?
    ‘குழந்தைகள் தினத்திற்கும் அந்தப் பையன் பிறந்த நாளுக்கும் என்ன சம்பத்தம்?’ என்றுதானே கேட்கிறீர்கள்? கேளுங்கள்; நன்றாய்க் கேளுங்கள்.
    நவம்பர் பதனான்காம் தேதியை நாடெங்கும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள் அல்லவா? இதற்குக் காரணம் என்ன? என் பிறந்த நாள்க் குழந்தைகள் இனமாகக் கொண்டாடுங்கள். அப்படிக் கொண்டாட வேண்டுமென்பதுதான் என் ஆசை” என்று உலகம் போற்றும் ஒருவர் கூறினாரே, அவர் யார் என்று தெரிகிறதா? அவரைத் தெரிந்து கொண்டால், பிறந்த நாள் அடிக்கடி வராதா!' என்று கவலைப்பட்ட அந்தச் சிறுவனும் யார் என்பது தெரிந்துவிடும். என்ன, தெரிந்து கொண்டு விட்டீர்களா?

உலகம் போற்றும் தலைவர், மனிதருள் மாணிக்கமாக விளங்கியவர், நம் அருமை மாமா ஜவாஹர்லால் நேருதான் அந்தச் சிறுவன்!

44