பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்த்தை பேசக்கூடாது என்று நான் மற்றவர்களுக்குக் கூறி வருகிறேன். ஆனால், நானே இன்று கெட்டவார்த்தை பேசிவிட்டேனே! இது பெரும் தவறல்லவா? இனி, இந்த மாதிரி ஒரு நாளும் பேசமாட்டேன். இது சத்தியம்!” என்று கூறனான். யாரிடம்? தனக்குத்தானே கூறிக் கொண்டான் அதன்பிறகு அவன் கெட்ட வார்த்தை பேசியதே இல்லே!

    சிறுவயதிலேயே ஒழுக்கத்திற்கு அவ்வளவு தூரம் மதிப்புக் கொடுத்ததால்தான். பிற்காலத்தில் அவன் மிகப் சிறந்த அறிஞனாக விளங்கினான்.ஒரு சிறந்த தேச பக்தனாகத் திகழ்ந்தான்; அந்தச் சிறுவனின் பெயர்தான் தாதாபாய் நௌரோஜி.
    நௌரோஜி வகுப்பில் மட்டும்தானா முதல்வராயிருந்தார்? பொதுவாழ்விலும் முதல்வராகவே விளங்கினார். லண்டன் காமன்ஸ் சபையில் 

அங்கத்தினராயிருந்த முதல் இந்தியர் நௌரோஜிதான்! பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியல் பேராசிரியராயிருந்த முதல் இந்தியர் நௌரோஜிதான்! பம்பாய் நகரில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றை முதல் முதலில் ஏற்படுத்தியவரும் நெளரோஜி தான். இவை மட்டுந்தானா? காங்கிரஸ் மகாசபையை ஏற்படுத்திய முதல் தலைவர்களுள் நௌரோஜியும் ஒருவராக வந்தார். 'சுயராஜ்யம்' என்ற வார்த்தையை முதலில் உபயோகப் படுத்தியவரே நெளரோஜிதான்!

48