பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இது சத்தியம்
    அந்தப் பள்ளிக்கூடத்திலே அடிக்கடி விழாக்கள் நடைபெறும், ஒவ்வொரு விழாவிலும் மாணவர்கள் ஏதேனும் ஒரு நாடகம் நடத்துவார்கள். அந்த நாடகங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறு பையன் தவறாமல் நடித்து வருவான். ஒரு நாடகத்தில் அவன் இளவரசர் வேஷத்திலே வருவான். இன்னொரு நாடகத்தில் ஆங்கிலச் சிப்பாய் வேஷத்திலே வருவான். மற்ருெரு நாடகத்திலே அவன் ஜமீன்தாராக வருவான். எந்த வேஷம் போட்டாலும், அவனுக்கு அழகாயிருக்கும்; மிகவும் பொருத்தமாயிருக்கும்.
    ஒருவனுக்கு அழகும் வேஷப் பொருத்தமும் இருந்து விட்டால் போதுமா? படிப்பு வேண்டாமா? ஒழுக்கம் வேண்டாமா? கட்டாயம் வேண்டும். அந்தச் சிறுவனிடத்திலே அவையெல்லாம் இருந்தன. வகுப்பிலே அவன் தான் முதல்வனாக இருந்தான். நல்ல ஒழுக்கம் உள்ளவனாகவும் இருந்தான்.
    அவன் மாலைப் பொழுதில் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம். அந்த மாணவர்கள் சிலர் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். இது அந்தச் சிறுவனுக்குப் பிடிக்காது. ஏன் இந்த மாதிரியெல்லாம் பேசுகிறீர்கள்? இதனால், உங்களுக்கு என்ன லாபம்?' என்று அவர்களைச் சிறிது கோபத்தோடு கேட்பான்.

ஒருநாள் விளையாடும்போது அந்தச் சிறுவனே ஒரு கெட்ட வார்த்தையைக் கூறிவிட்டான். வேண்டுமென்று அவன் கூறவில்லை. தவறுதலாக அந்த வார்த்தை அவனது வாயிலிருந்து வெளிவந்து விட்டது. விளையாட்டு மும்முரத்தில் யாரும் அவன் பேசியதைக் கவனிக்கவில்லை. ஆனாலும், அவன் தன் தவறை நினைத்து வருந்தாமலில்லை. விளையாட்டு முடிந்து வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஓரிடத்தில் அவன் நின்றான். 'கெட்ட

47