பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 வாழைப் பழம்

பெரியம்மா ஒரு சீப்பு வாழைப் பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள். வாழைப்பழச் சீப்பைக் கண்டதும், பிள்ளைகள் எல்லாரும் பெரியம்மாவைச் குழ்ந்து கொண்டார்கள். பெரியம்மா சீப்பிலிருந்த வாழைப் பழங்களைப் பிய்த்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தாள்.

அந்தப் பிள்ளைகளில் மூத்த பிள்ளையிடத்தில் பெரியம்மாவுக்குப் பிரியம் அதிகம். அதனால், அவனுக்கு அதிகமாகப் பழங்கள் கொடுக்க நினைத்தாள். ஆனால், மற்றவர்களே வைத்துக்கொண்டு எப்படிக் கொடுப்பது? அவர்களும் அதிகமாகக் கேட்பார்களே!

பெரியம்மா அறைக்குள்ளே மீதம் இருந்த பழங்களைக் கொண்டுபோய் வைத்தாள். வைத்துவிட்டு வந்து, பெரியபையனிடம், “அறைக்குள்ளே இருக்கும் பழங்களெல்லாம் உனக்குத்தான். அப்புறமாக யாருக்கும் தெரியாமல் எடுத்துத் தின்றுவிடு” என்று சைகை மூலம் அறிவித்தாள். ஆனால் பாவம், அந்தப் பையனுக்கு அவளது சைகையின் அர்த்தம் தெரியவில்லை. அவனுக்குத்தான் தெரியவில்லையே தவிர, அங்கே நின்ற சின்னப் பையன் சுப்புரத்தினத்திற்கு நன்ருகத் தெரிந்துவிட்டது!

உடனே அவன், யாரும் பார்க்காதபடி மெதுவாக அறைக்குள்ளே புகுந்தான். அங்கே இருந்த அத்தனை பழங்களையும் தின்று தீர்த்தான். கடைசியில் பழங்கள் இருந்த இடத்தில் தோல்களே வைத்துவிட்டு மெதுவாக வெளியில் வந்துவிட்டான்.

சிறிது நேரம் சென்றது. பெரியம்மா மூத்த பிள்ளையை அழைத்து, “தம்பி, அறைக்குள்ளே இருக்கிற பழங்களே

51