பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்த்துவைத்து இது போன்ற கூட்டங்களுக்கே அவன் செலவிடுவான். அந்த விஞ்ஞானிகள் பேசுவதையும் கேட்டுக் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வான். இப்படி அவன் எடுத்த குறிப்புக்களை யெல்லாம் அவனே சொந்த மாக பைண்ட் செய்து வைத்திருந்தான். அவனுடைய கையெழுத்தின் அழகையும், பைண்ட் செய்யும் திறமையையும் இன்றும் லண்டனிலுள்ள ராயல் இன்ஸ்டிட்யூஷன் புத்தக சாலையில் காணலாம். 150 ஆண்டு களுக்கு முன்பு அந்தப் பையன், தானே எழுதி, பைண்ட் செய்த அந்தப் புத்தகங்கள் அங்கே வைக்கப்பட்டிருக். கின்றன. அந்தப் புத்தகங்கங்களுக்கு ஏன் அவ்வளவு மதிப்புக் கொடுக்கவேண்டும்? 'காந்த சக்தியிலிருந்து மின்சார சக்தியை உண்டாக்க முடியும் என்ற உண்மையைக் கண்டுபிடித்த மிகப் பெரிய விஞ்ஞானியாகிய மைக்கேல் ஃபாரடே தயார் செய்தவையே அந்தப் புத்தகங்கள்! அதனுல் தான் அவற்றிற்கு அவ்வளவு மதிப்பு: ஃபாரடே இல்லாவிடில் டைனமோ என்கிருேமே, அதைப் பார்க்க முடியுமா? டைனமோவால் தினமும் எத்தனை இயந்திரங்கள், எத்தனை க ரு வி க ள் வேலை செய்கின்றன!. .