பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தம்பியின் கட்டுரை அண்ணன் சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்திவந்தார்; சொந்தமாக ஒர் அச்சகமும் வைத்திருந்தார். அங்கேதான் அவருடைய சொந்தத் தம்பி ஒருவனும் வேலைபார்த்து வந்தான். எழுத்துக் கோப்பது, அச்சடிப்பது, பத்திரிகையை வீட்டுக்கு வீடு கொண்டு போய்ப் போடுவது-இப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் அந்தத் தம்பி செய்து வந்தான். அவனுக்கு நிறையப் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நிறையப் படிக்கப் படிக்கத் தானும் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மனத்தில் தோன்றியதை யெல்லாம் எழுதினன். எழுதியதை யெல்லாம் பத்திரிகைகளில் வெளியிட விரும்பினன். 'அண்ணனிடம் கட்டுரைகளைக் கொடுத்தால் அ வ ர் வெளியிடுவாரா?” என்ற ச ந் தே க ம் அவனுக்குத் தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்தான், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். ஒரு நாள் இரவு, தான் எழுதிய ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான். நேராக அச்சகத்தை அடைந்தான். தெருப் பக்கமாக இருந்த ஜன்னல் வழியாக ஆசிரியரின் அறைக்குள் கட்டுரையைப் போட்டுவிட்டு வீடு திரும்பினன். இதை அப்போது எவருமே பார்க்கவில்லை. மறுநாள் காலையில் ஆசிரியரான அண்ணன், அறைக் குள் நுழைந்தார். கீழே ஒரு காகிதக் கற்றை கிடப்பதைக் கண்டார். உடனே குனிந்து அதை எடுத்தார்; படித்துப் பார்த்தார். கட்டுரை மிகவும் நன்ருக இருந்தது. எழுதி யவர் யார் என்று பார்த்தார். பெயரைக் காணுேம்! திருப்பித் திருப்பிப் பார்த்தார். பயனில்லை. உடனே, அந்தக் கட்டுரையைத் தம்முடைய நண்பர்களிடம் காட்டினர். எல்லாரும் அதை மிக மிகப் பாராட்டினர்கள். பத்திரிகை 55