பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் உடனே வெளியிட வேண்டும் என்றும் சொன்னர்கள், அவர்கள் சொன்னபடியே அண்ணன் செய்தார். தம்பி இப்படியே பல கட்டுரைகளை எழுதி எவருக்கும் தெரியாமல், அறைக்குள் போட்டு வந்தான். எல்லாமே அச்சில் வந்தன. ஆலுைம், எழுதியவர் யார் என்று. மட்டும் அவர்களுக்குத் தெரியவில்லை. புகழை விரும்பாத ப்படிச் செய்து வருகிருர்’ என்று நினைத் தார்கள். ஆணுல், எவ்வளவு நாட்களுக்குத்தான் இது இரகசிய மாகவே இருக்க முடியும்? ஒரு நாள் அம்பலமாகி விட்டது! உண்மை தெரிந்ததும், எல்லாரும் தம்பியைப் பாராட்டி ஞர்கள். அதே தம்பி பிற்காலத்தில் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியனுக விளங்கிளுன்! அரசியல், கலே, விஞ்ஞானம், வேதாந்தம், பொருளா. தாரம் முதலிய எல்லாவற்றிலும் அவன் நிபுணனுக விளங்கினன். அப்படியானுல் அவன் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே! ஆம், நன்ருகத் தெரிந்துதான் இருக்கிறது. பெஞ்சமின் ஃபிராங்க்ளின் என்ருல், அமெரிக் காவில் சிறு குழந்தைகளுக்குக்கூடத் தெரியும். ஃபிராங்க்ளின் கண்டுபிடித்த இடிதாங்கி யால்தான் இன்று பெரிய பெரிய கட்டடங்களெல்லாம் இடியினுல் சேதமாகாமல் நிமிர்ந்து நிற்கின்றன!