பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லேயில்லாது விரிந்து கிடக்கின்றன, அதேபோல் கிருஷ்ண பகவானும் எல்லையில்லாது எங்கும் வியாபித் துள்ளான் என்பதைக் காட்டவே நீலநிறம் கொடுக்கப் பட்டிருக்கிறது.’’ என்ருன். இந்த அருமையான பதிலேக் கேட்டதும் விவேகானந்தர் மிகவும் வியப்படைந்தார். ராஜகோபாலனே மனமாரப் பாராட்டினுர். சிறு பையனுக இருந்தபோதுதான் அவனை ‘ராஜகோ பாலன்', ராஜகோபாலன்” என்று அழைத்தார்கள். ஆஇல் இப்போதும் அதே பெயரைச் சொல்லியா நாம் அழைக்இ ருேம்? இல்லையே! ராஜகோபாலன் என்ற பெயர் மறந்து கூடப்போய்விட்டதே ராஜாஜி என்றல்லவா மிகவும் மரியாதையாக, அன்பாக அழைக்கிருேம்: சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக விளங்கிய ராஜாஜி, ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை அடையவும், கள்ளை ஒழிக்கவும், திண்டாமையை அகற்றவும் எவ்வளவு தூரம் பாடுபட்டிருக்கிமூர் அவர் எழுதிய வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன்’, ‘கற்பனைக்காடு' போன்ற பல அற்புதமான புத்தகங்களையெல்லாம் நாம் அவசியம் படிக்கவேண்டுமல்லவா? 6垒