பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

பொம்மை நாடகம்


அப்பா செருப்புத் தைப்பவர்; அம்மா துணி வெளுப்பவள். அவர்களுக்கு ஒரு பையன். அவன் பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காகப் போகமாட்டான். அப்படியே போனலும், பாடங்களைச் சரியாகக் கவனிக்கமாட்டான். எப்போதும், ஏதாவது கனவு கண்டுகொண்டேயிருப்பான்.

அவன் அப்பாவுக்கு அவனிடத்திலே பிரியம் அதிகம். அவர் அவனுக்குப் பொம்மை நாடகமேடை ஒன்றைச் செய்து கொடுத்தார். அதில் அந்தப் பையன் சில பொம்மைகளே நிறுத்திவைப்பான். சும்மா நிறுத்தி வைக்க மாட்டான்; அலங்காரமான உடுப்புகளுடனே நிறுத்தி வைப்பான்; தையற்கடையில் கிடைக்கும் துண்டுத் துணிகளைக்கொண்டே மேல் சட்டை, கால் சட்டை, தொப்பி முதலியவற்றைத் தயார் செய்து பொம்மைகளுக்குப் போடுவான்.

அவன் தயாரிக்கும் உடைகள் மிகவும் அழகாயிருக்கும். அவனுடைய தையல் வேலையைப் பார்த்து, நம்முடைய மகன் பெரியவனானதும், ஒரு பெரிய தையற்காரன் ஆகிவிடுவான்' என்று அம்மா நினைத்தாள். ஆனால், அவள் நினைத்தபடி நடக்கவில்லை.

அந்தப் பையன் பொம்மைகளை வைத்துத் தினமும் நாடகம் நடத்துவான். மேடையில் நிற்கும் பொம்மைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நடிகராக நினைத்துக் கொள்வான். அந்த நடிகர்களுக்குத் தகுந்தபடி நாடகம் வேண்டாமா? உடனே, அவன் தானாகவே கற்பனை செய்து நாடகம் தயாரிப்பான். பொம்மை நடிகர்கள் ஒவ்வொரு வரும் நடிப்பது போலக் கனவு காண்பான்.

இந்தப் பழக்கம் வளர்ந்துகொண்டே வந்தது. கொஞ்ச காலம் சென்றதும், கதைகள், நாடகங்கள் எழுத வேண்டும்

5