பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பெண் வேஷம்



ஒரு பணக்காரருக்குச் சில பெண் குழந்தைகள் இருந்தார்கள். அந்தக் குழந்தைகளை அவர் வெளியில் அனுப்பவே மாட்டார். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைப்பார். ஆண் குழந்தைகளுடன் அவர்கள் பேசக்கூடாது; சேர்ந்து விளையாடக் கூடாது என்பது அவரது கண்டிப்பான உத்தரவு.

அந்தப் பணக்காரர் வீட்டுக்குச் சமீபத்தில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலே ஒரு சிறு பையன் இருந்தான். அவனுக்கு அந்தப் பணக்காரருடைய போக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அந்தப் பணக்காரரிடத்திலே இதைக் கூறிவிட்டான். உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அப்படித்தான் செய்வேன். எங்கே எந்தப்பயலாவது என் பெண்கள் இருக்கும் இடத்திற்குப் போய்விடட்டும், பார்க்கலாம்" என்று விறாப்புப் பேசினார்.

"ப்பூ. என்ன பிரமாதம்! நானே போய்க் காட்டுகிறேன்' என்று சிரித்துக்கொண்டே சொன்னான் அந்தப் பையன். அவுன். ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்றே பணக்காரர் நினைத்தார். ஆனால், அவன் அதைக் காரியத்திலே காட்டிவிட்டான்.

ஒரு நாள் மாலை நேரம். அந்தப் பையன் ஒரு சிறுமியைப் போல் அழகாக வேஷம் போட்டுக்கொண்டான். வேஷம் அவனுக்கு மிக மிகப் பொருத்தமாக இருந்தது. அப்போது யாராலுமே அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த வேஷத்துடன் அவன் பணக்காரர் விட்டுக்குப் போனான். பணக்காரரின் முன்னே போய் நின்றான். "ஐயா, நான் பக்கத்து ஊர்க்காரி. இந்த ஊர்ச் சந்தைக்கு வந்தேன். என் கூட வந்தவர்கள் என்னைத் தனியாக விட்டுப் போய்விட்டார்கள். இருட்டிப் போனதால் ஊருக்குப் போகப் பயமாயிருக்கிறது. இன்று இரவு

7