பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அறைக்குள் தியானம் நரேந்திரன்-இதுதான் அந்தச் சிறுவனுக்கு அவ னுடைய அப்பா அம்மா வைத்த பெயர். இந்தப் பெயரைச் சொல்லியே எல்லாரும் அவனே அந்தக் காலத்தில் அழைத்து வந்தார்கள். ஒருநாள், நரேந்திரன் கடைவீதிக்குச் சென்ருன். அப் போது அங்கு ஒரு ராமர் விக்கிரகத்தைக் கண்டான். உடனே அதை விலைகொடுத்து வாங்கி வீட்டுக்குக் கொண்டு வநதான. நரேந்திரனுக்கு மிகவும் வேண்டிய தோழன் ஒருவன் இருந்தான். அவனும் நரேந்திரனும் தினந்தோறும் அந்த விக்கிரகத்தை வைத்துப் பூஜை செய்து வந்தார்கள். ஒருநாள், அவர்கள் இருவரும் அந்த விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்ருர்கள். அங்கிருந்த ஒர் அறைக்குள் விக்கிரகத்தை வைத்தார்கள். அறைக் கதவை நன்ருக மூடித் தாழிட்டுவிட்டு விக்கிரகத்தின் எதிரே உட்கார்ந்தார்கள். அலங்காரம், பூஜை எல்லாம் நடத்திய பிறகு இருவரும் கண்களே மூடிக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தார்கள். வெகு நேரம் ஆகியும், அவர்கள் தியானம் முடிந்து எழுந்திருக்கவில்லை. அப்படியே ஆடாமல்,அசையாமல் உட்கார்ந் திருந்தார்கள். நரேந்திரனையும், அவன் தோழனையும் வெகுநேரமாகக் காணுததால் இரு வீட்டாரும் அவர்களைத் தேடஆரம்பித் தார்கள். எங்கெங்கோ தேடிஞர்கள். அகப்படவில்லை. கடைசியில் மாடிக்கு வந்தார்கள். மாடி அறை தாழிடப் பட்டிருப்பதைக் கண்டதும், பெயர்களைச் சொல்வி அழைத் தார்கள்; பதில் இல்லே, உரக்கக் கூவினர்கள். கதவை மடமட வென்று தட்டினர்கள். அப்போதும் பயனில்லை. கடைசியாக அவர்கள் பலமாகக் கதவை உதைத்துத் தள்ளி 71