பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகவும் வருத்தப்பட்டான். உடனே, அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, அதன் சொந்தக்காரரிடம் சென்ருன் ! ஐயா, இந்தப் புத்தகத்தை ಹ್ಲಿ ஜன்னல் ஒரமாக அஜாக்கிரதையாக வைத்துவிட்டு, நேற்று இரவு தாங்கி விட்டேன். மழையில் இது நன்முக நனைந்து கெட்டுப்போய் விட்டது. தயவு செய்து மன்னித் தருணவேண்டும்' என்று பயத்துடன் கூறினன். உடனே அவர், அதெல்லாம் முடியாது. இந்தப் புத் த க த் தி ன் விலையை நீ தந்துவிட்டுத்தான் போக வேண்டும். அல்லது, என் வயலில் நீ மூன்று நாட்கள் வேலை செய்யவேண்டும்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

'சரி, அப்படியே செய்கிறேன். இந்தப் புத்தகத்தை எனக்கே கொடுத்து விடுங்கள் என்ருன். அவரும் அதற்குச் சம்மதித்தார். அவருடைய வயலிலே மூன்று நாட்களும் அந்தப் பையன் மாடாக உழைத்தான் நான்காவது நாள் அந்தப் புத்தகம் அவனுக்கே சொந்த மாகிவிட்டது. அப்போது அவன் அடைந்த ஆனந்தத்தை அளவிடவே முடியாது. அமெரிக்க ஜனதிபதி வா ஷி ங் ட ன் வாழ்க்கை வரலாற்றை ಶ್ಟಣ್ಣg೬. படித்த அந்தப் பையனும் பிற் காலத்தில் அமெரிக்காவின் ஜனுதிபதியாகி விட்டான்! ஆம், அமெரிக்க ஜனதிபதியாக இருந்து அடிமை வியாபாரத்தை ஒழித்துக் கட்டிய ஆப்ரஹாம் லிங்கன்தான் அந்தப் பையன்!