பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 புத்தகப் பிரியன் அந்தப் பையனுக்குப் புத்தகம் படிப்பதென்ருல் அளவு கடந்த ஆசை. ஆல்ை, அவனிடம் புத்தகம் வாங்கப் பணம் தான் இல்லை. அவனுடைய அப்பா பணக்காரராக இருந்தால், அவன் வி ரு ம் பு ம் புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுப்பார். ஆனல், அவரோ மிகவும் ஏழை. தச்சு வேலை செய்து வந்தார், அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கப் போகிறது! புத்தகம் வாங்கப் பணம் இல்லாததால், அவன் புத்தகம் படிக்கும் ஆசையை விட்டுவிடவில்லை. வெகு தூரம் நடந்து சென்று, நகரத்திலுள்ள சிலரிடம் கெஞ்சிக் கேட்டுச் சில புத்தகங்களை வாங்கி வருவான். படித்துவிட்டுப் பத்திரமாகத் திருப்பிக் கொடுப்பான். ஒரு நாள், ஜனதிபதி வாஷிங்டன்’ என்ற புத்தகத்தை ஒருவரிடமிருந்து வாங்கி வந்தான். இரவிலே உட்கார்ந்து அதைப் படித்துக்கொண்டே யிருந்தான். படிக்கப் படிக்க அந்தப் புத்தகம் மிகவும் அருமையாக இருந்தது. அமெரிக் கருக்கு விடுதலே வாங்கித் தந்த ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறுதான் அந்தப் புத்தகம், வெகு நேரமா கியும் அவன் படிப்பை நிறுத்த வில்லை. ஆனல், விளக்கி லிருந்த எண்ணெய் தீர்ந்து விட்டது. எண்ணெய் இல்லாத போது இரவிலே எப்படிப் படிக்க முடியும்? ஆகையால் புத்தகத்தை ஜன்னல் ஒரமாக வைத்துவிட்டுப் படுத்தான். நன்ருகத் தூங்கிவிட்டான். மறுநாள் காலையில் எழுந்ததும், முதல் வேலையாக புத்தகத்தின் அருகே சென்ருன். புத்தகத்தைப் பார்த்ததும் அவன் திடுக்கிட்டான். காரணம், இரவு பெய்த மழையில் அந்தப் புத்தகம் நன்ருக நனைந்து போய்விட்டது: "ஐயோ! புத்தகத்தின் சொந்தக்காரர் என்ன சொல்லுவாரோ? புத்தகம் இப்படிக் கெட்டுப் போய்விட்டதே!’ என்று 69