பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 ஆர்லோவ் தம்பதிகள் "அப்படி உன்னை அனுப்புவது நான் இல்லையே. நீ போக வேண்டாம்."

“என்னை அனுப்பிவிடுவதில் உனக்கு எவ்வளவோ சங்தோஷம் தான். உன்னே எனக்கு நன்றாகத் தெரியும்" என்ற இரக்கமில்லாமல் கத்தினான் அவன்.

மீண்டும் அவள் பதில் பேசவில்லை. இது அவன் கோபத்தை மேலும் கிண்டிவிட்டது. ஆயினும் தனது வழக்கமான கூப்பாடுகளை அவன் கட்டுப்படுத்திக்கொண்டான். அப்படி அவன் தன்னைக் கட்டுப்படுத்தியதன் காரணம், அப்பொழுது அவன் உள்ளத்தில் மிகவும் தந்திரமான எண்ணம் ஒன்று மின் வெட்டியதுதான். மிகப் பெரிய தந்திரம் என்றே அவன் அதை மதித்தான். "நான் ஏதாவது சாவுக் கிடங்கில் அகப்பட்டுக் கொள்வதைக் காண நீ ரொம்பவும் சந்தோஷப்படுவாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீ கொஞ்சம் காத்திரம்மா. எனக்கும் ஒன்றிரண்டு தந்திரங்கள் தெரியும். நானே உனக்குக் காட்டுவேன்" என்று அவன் பெருமை அடித்துக் கொண்டான். அவன் குதித்தெழுந்து, ஜன்னல் ஓரத்திலிருந்த குல்லாயை வேகமாக எடுத்துக் கொண்டு வெளியேறினான். அங்கே தனியளாய் விடப்பட்ட அவன் மனைவி தான் கையாண்ட உத்திகளுக்காக வருத்தப்பட்டாள்; அவனது மிரட்டல்களை எண்ணி வருந்தினாள் என்ன நேருமோ என்ற அச்சத்தினால் கலங்கியிருந்தாள். "ஏ கடவுளே, பரிசுத்த கன்னியே, தேவலோக ராணியே!” என்று முனங்கினாள் அவள்.