பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் $55 காலரா நோய்களை விட நான் மோசமானவன். எனக்கு உள்ளத்தின் வலிப்புகள் வேதனை தருகின்றன. நீ என்னிடம் எரிந்து விழுகிருய். என்னை மிருகம் என்று பழிக்கிறுய். குடிகாரன் என்கிறுய். இதெல்லாம் பெண்ணின் தர்க்கவாதம்தான்!” அவன் அமைதியாகவும் தெளிவோடும் தான் பேசினுன். என்றுலும் அவன் பேச்சை அவள் கேட்க வில்லை. இறந்த கால நிகழ்ச்சிகளைக் கடுமையாகத் தனது உள்ளத்தில் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். "ஆகவே நீ சொல்வதற்கு எதுவுமே இல்லையாக்கும்?" என்ருன் கிரிகரி. அவனுள். புதிதாக வலிய உணர்வு ஏதோ பொங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. 'நீ ஏன் ஏதாவது சொல்லக் கூடாது? என்னிடம் நீ என்ன தான் விரும்புகிருய்?" "உன்னிடம் கான் எதையும் விரும்பவில்லை. உன்னல் என்னைச் சும்மா விட முடியவில்லையா என்ன? உனக்கு என்னதான் வேண்டும்?' என்று அவள் கேட்ட்ாள். "எனக்கு என்ன வேண்டுமா? எனக்கு வேண்டியது .........எனக்கு வேண்டியது...' தனக்கு வேண்டியது என்ன என்பதைத் தன்னல் சொல்ல முடியவில்லை-உடனடியாக, தனக்கும் அவளுக் கும் தெளிவாக விளங்கும்படி அதைச் சொல்ல இயல வில்லை-என்று கிரிகரி உணர்ந்தான். அவனுக்கும் அவளுக்கு மிடையே ஒரு பிளவு ஏற்பட்டு விட்டது எவ் விதமான வார்த்தைகளும் அதை இணைத்து விட முடியாது என்பதையும் அவன் அறிந்தான்.