பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்லோவ் தம்பதிகள் 163 போய் விடலாம். அது என் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனுல் நாம் மறுபடியும் சந்தித்தால், உன்பாடு பெரும் பாடாக முடியும் என்பதை மட்டும் நிச்சயமாக நம்பிக்கொள்' என்று எச்சரித்து விட்டு வாசலை நோக்கி நடந்தான். கிரிகரி தன்னைக் கடந்து செல்கையில், "சோக நடிகரே, வணக்கம்” என்று டாக்டர் கிண்டலாகச் சென்னுர். கிரிகரி தயங்கி கின்று, துயரம் கனலும் கண்களே உயர்த்தி அவரைப் பார்த்தான். 'என்னேச் சும்மா விடுங்கள். திரும்பவும் எனக்கு முறுக்கேற்ற வேண்டாம். இந்தத் தடவை யாரையும் காயப் படுத்தாமலே வில்விசை தளர்ந்து விட்டது. அது அப்படியே போகட்டும்' என்று அமைதியாகச் சொன்னன். தரையில் கிடந்த குல்லாயை எடுத்துத் தன் தலையில் திணித்தபடி, தோள்களைக் கூனிக் கொண்டு, மனைவி பக்கம் கொஞ்சம் கூடத் திரும்பிப் பாராமலே அவன் வெளியேறினன். டாக்டர் கவலையோடு ೨ ಮಿಹಿಗಹ കുഖങ്ങി த்தார். அவள் முகம் வெளிறியிருந்தது. கிரிகரி சென்ற திசையில் த லே ைய அசைத்து, "அவனுக்கு என்ன வந்து விட்டது?’ என்று டாக்டர் கேட்டார். 'எனக்குத் தெரியாது.” "இப்பொழுது அவன் எங்கே போவான்?" "குடி போதை பெறுவதற்குத் தான்' என்று மேட் ரோன தயக்கமின்றிப் பதில் சொன்ள்ை. டாக்டர் புருவங்களே உயர்த்திக் கொண்டார். பிறகு வெளிய்ே போளுர்,