பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 இரண்டு குழந்தைகள் வீரர்களும் இருண்ட நிழல்களில் உட்கார்ந்திருந்தார்கள். மிகவும் அசிங்கமான ஏவலாளர்கள் மேஜைகளுக்கு ஊடாக அலைந்து திரிந்தனர். அந்த இடத்தில் உள்ள ஒவ்வொன்றும் கூச்சலிட்டுக் கொண்டும், பாடிக் கொண்டும், வசை பொழிந்து கொண்டும் இருந்ததாகத் தோன்றியது. ஒரு மூலையில் காலியாகக் கிடந்த மேஜை ஒன்றை மிஷ்கா கண்டான். விரைவாக அங்கு போய்ச் சேர்ந்தான். தனது மேல் சட்டையைக் கழற்றி விட்டு அவன் சரக்குகள் விற்கும் இடத்திற்குப் போனான். தன்னைச் சுற்றிலும் கூச்சத்துடன் பார்த்துக் கொண்டே காட்காவும் தனது மேலங்கியைக் கழற்றத் தொடங்கினாள். மிஷ்கா, அங்கு முன்னாலிருந்த பலகை மீது தன் முஷ்டிகளால் லேசாகத் தட்டியவாறு, அங்கே நின்ற ஆளிடம், "எனக்குக் கொஞ்சம் டீ தருகிறீர்களா மிஸ்டர்?" என்று கேட்டான். "டீயா நிறைய உனக்கு வேண்டிய மட்டும் குடி, முதலில் கொஞ்சம் வெந்நீர் எடுத்து வா,போ. சாமான்கள் எதையும் உடைத்து விடாதே, ஜாக்கிரதை. உடைத்தே, அப்புறம் நான் உனக்கு நல்ல பாடம் கற்பித்து விடுவேன்." ஆனால் மிஷ்கா தண்ணீர் கொண்டு வர ஒடிப் போய் விட்டான். இரண்டு நிமிஷங்களுக்குப் பிற்கு, அவன் தனது தோழியின் அருகில் மிடுக்காக உட்கார்ந்து, அன்றைய வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்த கூலிக்காரனின் தோரணையோடு தனக்காக ஒரு சிகரெட் தயாரிப்பதில் முனைந்து விட்டான். காட்கா வியப்பு நிறைந்த விழிகளால் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். போது இடத்தில்