பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

#3 ஆர்லோள் தம்பதிகள் சமாதானத்தை வேண்டியும், அவள் புன்னகையை எதிர் நோக்கியும் அலையும் அவன் கண்களை அவள் புறக் கணித்து விடுவாள். இவ்விதம் அவனுடைய உணர்ச்சி களோடு விளையாடுவது அவன் கொதிப்பைக் கிளறிக் கோபத்தை விளைவிக்கும் என்ற பயத் துடிப்பு அவள் உள்ளத்தில் கிறைந்து விடும். ஆனலும், அதே சமயத்தில் அவள் அவளுேடு கோபம் கொள்வதிலும், அவன் சமாதானமாகி விடுவற்குச் செய்யும் முயற்சிகளைக் கவனிப் பதிலும் மிகுந்த திருப்தியே அடைந்தாள். அதன் மூலம் அவள் வாழ்கிருள், உணர்கிருள், சிந்திக்கிருள் எ ன் ற நிறைவாவது ஏற்படுகிறதே! அவர்கள் இருவரும் வாலிபமாகவும் வலிமையுடனும் இருந்தார்கள். பரஸ்பரம் அவர்கள் காதலித்தார்கள். ஒரு வரைப்பற்றி மற்றவர் பெருமையும் கொண்டிருக் தனர். கிரிகளி ஆற்றல் கிறைந்தவன், ஆர்வம் மிகுந்தவன்; அழகானவன். மேட்ரோன இனியள்; சதைப் பிடிப்பு உடையவள். அவளுடைய சாம்பல் வர்ண விழிகளிலே தனி ஒளி மின்னியது. முற்றத்து ஆசாமிகள் பாஷையிலே 'அருமையான குட்டி' அவள். அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். ஆயினும் வாழ்க்கை அவர்களுக்கு அலுப்பு மயமாகத் தோன்றியது. பரஸ்பரம் ஒருவரிட மிருந்து மற்றவர் விடுதலே பெறவும், சிங்திக்க வேண்டும் உணர வேண்டும் என்று இயல்பாக எழுகிற மனித ஏக்கத்தை கி றை வு செய்வதற்கும்-சுருக்கமாகச் சொன்னல், வாழ்க்கையை வாழ்வதற்கு-அவர்களிடம் வேறெவ்விதமான சிரத்தையுமில்லை; புதிய மனேபாவங் களும் இல்லை. அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பற்றுதல் தேவை. அது காசுகாசாகச் சேர்த்து பணத்தைப் பாதுகாக்கும் பண்பாக இருக்தால் கூடப் பரவாயில்லே,