பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 1101 மகிழும் மனிதன்! நெஞ்சில் நேர்மை எனக்குண்டு! - அழியா நீதி வாய்மை எனக்குண்டு! வஞ்சனைப் பகையைத் துரத்திடவே - வீர வாளும் கவசமும் எனக்கவையே! இன்புற மனிதப் பிறப்பெடுத்தேன்! - அறிவால் ஏற்புறும் கல்வி சிறப்படைந்தேன்! அன்புறும் நற்பணி நான்புரிவேன்! - எந்த அயலவர் ஆணைக்கும் நான் பணியேன்! ஆசைகள் என்னை ஆள்வதில்லை! - என் ஆவி மகிழ்ந்திடும் மாள்வதற்கும்! பாசம் பந்தம் அறுத்துவிட்டேன்! - வெறும் பகட்டுப் புகழும் வெறுக்கின்றேன்! குறுக்கு வழிகளில் உயர்ந்தவரைக் - கண்டே குமுறும் பொறாமை வீணன்றோ? தறுக்கு தற்புகழ் நானறியேன் - வறட்டுச் சட்ட திட்டமும் நானறியேன்!