பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 105 தெய்வ தினம்! பாருக்கு இன்றொரு புனிததினம்! - தீய பாபங்கள் கருகவரும் புண்யதினம்! காருக்கு நிகர்மேனி வண்ணனாம் - அந்த கண்ண பிரான் பிறந்திட்ட தெய்வதினம்! சொல்லுக்குள் அடங்காத மாயப்பொருள் - சிறு ஜோதியுருக் குழந்தையாய் வந்ததினம்! வில்லுக்கொரு பார்த்திபனின் தேரோட்டி - கீதை விளம்பியருள் செய்தவனின் ஜன்மதினம் பிள்ளைச் சிறு விளையாடல் ஆயிரமாய்ப் - புவி பெரிதுவந்து வியந்திடவே செய்தவனாய், உள்ளமெலாம் கவர்ந்திடுமோர் ஆயமகன் - பிறந்த உற்சவமே கொண்டாடும் இன்பதினம்! தாம்புக்குள் கட்டுண்டே உரலிழுத்தே - பெற்றத் தாய்க்குத்தன் திருவாயில் புவிகாட்டிப் பாம்புக்கும் புலிக்கும் நெஞ்சிளக - குழல் பண்ணிசை பொழிந்தவனின் நாமதினம்