பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 171 தாயே ! என்றைக்கும் துணை நிற்கும் ஒரு தெய்வம் தாயே! ஈடேதும் இணையேதும் அற்றவள்தான் தாயே! குன்றுக்கும் மனமிளக அன்பளிப்பாள் தாயே! கோவிலுக்குள் நடமாடும் வடிவாவாள் தாயே! பாலூட்டித் தாலாட்டும் தாய்க்கு நிகர் தாயே! பாராளும் மன்னனையும் ஈன்றவள்தான் தாயே! ஞாலத்தில் கண்கண்ட முதல் தெய்வம் தாயே! ஞானத்தின் பாசத்தின் முதற் பள்ளி தாயே! •+ -ī- -í