பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 189 அழகு அழகுக் கோலம்! அழகு அழகுக் கோலமாம்! அச்சு அச்சாய்க் கோலமாம்! பழகிப் பழகி அம்மாவும் பாங்காய்ப் போடும் கோலமாம்! ஆடும் மயிலைப் போலவும் ஆசை ரோஜா போலவும் வீடும் விளக்கும் போலவும் விளங்கி மின்னும் கோலமாம்! கிளியும் பழமும் போலவும்: கிளையும் மரமும் போலவும்: நெளியும் கோடும் புள்ளியும் நெருங்கி இழைத்தக் கோலமாம்!