பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 / வயலூர் சண்முகம் சாதித் தீட்டு ஒழிய - எங்கும் சமரசப் பாட்டு பொழிய காதித் தொழில்கள் ஓங்க - நெறிகள் காட்டிப் போன பொம்மை! வெள்ளைக் கழுகை விரட்ட - அகிம்சை வில்லை எடுத்த பொம்மை! தள்ளிப் போக நினைத்தோர் - பங்கைத் தந்து வாழ்த்திய பொம்மை! நீசக் குண்டுகள் பாய்ந்து - ஆவி நீத்து உடம்பு மாய்ந்தும் தேசம் மேவும் மக்கள் - இதய தீப மான பொம்மை! பொம்மை நல்ல பொம்மை - காந்தி பூத்த முகத்துப் பொம்மை! பொம்மை நல்ல பொம்மை - அறத்தின் பூர்வ புண்ணியப் பொம்மை! •+ -ī- - -