பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருகின்றனர். ஊரென்றால் ‘உறையூர்’, பூவென்றால் ‘தாமரை’ என்பது போல ‘குழந்தைக் கவிஞர்’ என்றாலே அது அழ. வள்ளியப்பாவைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. கவிமணி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டார்; முளைத்து வளர்ந்துள்ள குழந்தைக் கவிதையெனும் ஆலின் அடிமரமாகவும் ஆணிவேராகவும் இருப்பவர் அழ. வள்ளியப்பாவே ஆவர். இன்று நூற்றுக்கணக்கில் அந்த ஆலின் விழுதுகள் கவிதை நிலத்திலுான்றிக் கவின் செய்கின்றன.

“குழந்தைகட்கு எழுதுபவர்கள் தம் அறிவாற்றல் புலமைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தாமும் குழந்தையாகி, குழந்தைகளின் மன இயல்புகளை ஓர்ந்து அவர்கள் சுவைக்கும் விதத்தில் கவிதைகளைப் படைக்கவேண்டு”ம் என்பதை முற்றிலும் கடைப்பிடித்து எழுதியவர்- எழுதி வருபவர் திரு. அழ. வள்ளியப்பா ஆவர்.

கற்பிக்கும் ஆசிரியர்

எதையும் நேரடியாகக் கற்பிப்பதை விடக் கதை வாயிலாகவோ, பாடல் வாயிலாகவோ கற்பிக்கும்போது குழந்தைகள் அவற்றை எளிதில் கற்றுக் கொள்ளுகின்றன. கவிஞர் அழ. வள்ளியப்பா,

அ, ஆ என்றேனே
அத்தை வீடு சென்றேனே
இ, ஈ என்றேனே
இட்டலி எட்டுத் தின்றேனே...

என அகர வரிசையையும்,

vii