பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்து விட்டேன் நானுமே. பாய்ந்தேன் அந்த நிமிடமே. கோபக் குரலில் கத்தினேன்; - குரைத்துக் கொண்டே துரத்தினேன். என்னைப் பார்த்துத் திருடனும் எடுத்தான் ஓட்டம் வேகமாய். தலை தெறிக்க ஓடியே தப்பிப் பிழைத்து விட்டனன். ஆனை போல உருவமும் ஆட்டுக் கடா மீசையும். கோவைப் பழத்துக் கண்களும் கொண்ட திருடன் முனியனைப் பார்த்துத் தானே நீயுமே பயந்தே ஓடிப் பதுங்கினாய்? அமா வாசை இருளிலே அஞ்சி ஒடி ஒளிந்தநீ திருடன் போன மறுதினம் சிறிதே தலையை நீட்டினாய். மெல்ல மெல்லத் தினமுமே வெளியே எட்டிப் பார்த்தநீ திருடன் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டாய் இன்றுதான். வாரம் இரண்டு ஆனபின் வந்து முழுசாய் நிற்கிறாய். ஏனோ என்னைப் பார்த்துநீ இளப்ப மாகச் சிரிக்கிறாய்? 140