பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணன்: கண்ணா, மாடி அறைக்குள்ளே கண்ணன்: கறுத்த அட்டைப் பெட்டியிலே, காசுகள் நிறைய வைத்துள்ள்ேன். கணக்காய் எண்ணிச் சொல்லிடுவாய், சரியாய்ச் சொன்னால், அத்தனையும் தருவேன் உனக்கு, உனக்கேதான்! சீடை முறுக்கு வாங்கிடலாம்; தின்று நீயும் மகிழ்ந்திடலாம். அண்ணா, அண்ணா, இப்பொழுதே அத்தனை படியும் ஏறிடுவேன். எட்டிப் பாய்ந்து பெட்டியிலே இருக்கும் பணத்தை எண்ணிடுவேன். சீக்கிரம் எண்ணிச் சொல்லிடுவேன். சீடை முறுக்கு வாங்கிடுவேன். ஆசை தீரத் தின்றிடுவேன். அண்ணன் சொல்லைத் தட்டுவதா?