பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை



அன்னம் எனக்கே
ஊட்டிய கை.
அன்பாய்த் தொட்டில்
ஆட்டிய கை.
வண்ணப் பறவை
மலர்கள் தலையில்
சூட்டிய கை
கண்கவர் சட்டை
மாட்டிய கை.
கண்ணில் மையைத்
தீட்டிய கை.
கட்டி அணைத்துப்
போற்றிய கை.
கடவுள் போன்ற
அன்னையின் கை!