பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

9




பின்னர் ஒருமுறை அவன் தன் மனைவியுடன் தன் மாமனார் இல்லம் சென்றபோது, விருந்தினர்கள் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். உடனே அந்த இளைஞனின் மனைவி, அவனைத் தலைமை இருக்கைகுச் சென்று அமரும்படி சைகை செய்தாள். அவள் கணவனோ இருக்கைகளின் உயரத்தில் வேறுபாடு இருப்பதைக் கண்டான். அத்துடன் ஏணிப்படி ஒன்று உணவுக் கூடத்தில் இருப்பதைக் கவனித்தான். ஒரே ஓட்டமாக ஓடி அந்த ஏணிப்படிகளில் விரைந்து ஏறி பாதிப் படிகளைக் கடந்தான். இதனைக் கண்ட அவன் மனைவி அவனை முறைத்துப் சினத்துடன் பார்த்தாள். ஆனால் அவள் பார்வையின் பொருள் புரியாதபடி, “எவ்வளவு உயரம் ஏற வேண்டும் என்று நீ விரும்புகிறாய்; விண்ணகத்தை எட்டிப் பிடிக்கும் மட்டுமா?” என்று அவன் உரத்த குரலில் கேட்டான். செய்வதறியாது, திகைத்தாள் அவன் மனைவி.

6. பிழைப்புக்கு ஒருவழி தேடு

பிறர் தன்னை வாயாரப் புகழ்வதைக் கேட்க விரும்பினான் ஒருமனிதன். அவனின் இந்த இயல்பை அறிந்த ஒரு மனிதன் அவனைப்பற்றி அவன் முன்னிலையில் புகழ்ந்து பேசினான். அவன் சொன்னான், “வாழ்நாளெல்லாம் செல்வச் செழிப்புடன் நீ வாழ்வாய் என்பதை உன் கண்கள் சொல்கின்றன” என்றான். இதனைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன அந்த புகழ் விரும்பி அந்த மனிதனைப் பல நாள்கள் தன் வீட்டில் விருந்தினனாக வைத்து ஓம்பிப், பின் விலையேறப் பெற்ற பொருள்களைப் பரிசாகக் கொடுத்தான். பிரிந்து செல்லும்போது அந்த மனிதன் புகழ் விரும்பியிடம்