பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


சிக்கிய(புதைந்த) படகை மீட்கப் பெரும்பாடுபட்டு விட்டான். படகு அவன் தலையின் மீது புறண்டு விழுந்தது. அதிர்ந்து போன குள்ளன், "ஆழம் குறைவாக இருந்ததால் படகு தரையில் சிக்கிக் கொண்டது. ஆழம் அதிகமானதால் நான் சிக்கிக் கொண்டேன்" என்று கத்தினான்.

109. சோயாவிலிருந்து இறைச்சி

சோயாபிண்ணாக்கிலிருந்து இறைச்சி(கறி) செய்து உண்மை இறைச்சியென விற்று வந்தான் ஒருவன். அவன் இந்த கமுக்கத்தை யாரிடமும் கூறிவிடாதே என்று தன் வாணிப நுட்பத்தை மகனிடம் சொல்லி எச்சரித்து வந்தான். சில நாள்களுக்குப் பின் வாடிக்கையாளர் ஒருவர் இறைச்சி வாங்க வந்தார். “இது சோயாவில் உண்டாக்கியதன்று” என்று தானாகவே வாடிக்கையாளரிடம் கூறினான் மகன். இதைக் கேட்டதும் வாடிக்கையாளருக்குச் ஐயமேற்பட்டது. இறைச்சி வாங்காமலே அவர் அவ்விடம் விட்டு அகன்றார். இதை அறிந்த புலால் கடைக்காரன் தன் மகனை