பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


இடத்தைப் படகில் ஃ என்று அடையாளமிட்டான். படகு கரை சேர்ந்தது. வீரன் உடனே படகில் ஃ அடையாளிட்ட இடத்துக்கு நேராக நீரில் இறங்கி வாளினைத் தேடினான்.

12. முரண்பட்ட இரண்டு தவறுகள்

பயனற்ற மகன் ஒருவன் தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாகவே எப்போதும் செயல்பட்டு வந்தான். இதனை உணர்ந்த அவனின் தந்தை சாக்காட்டுப் படுக்கையில் இருக்கும்போது, தன் விருப்பத்திற்கு மாறாகத்தான், மகன் செயல்படுவான் என்று எண்ணி மகனிடம், “மகனே, நான் இறந்ததும் ஏதாவது ஓர் நீர் நிலையில் என் உடலை அடக்கம் (புதைத்து) செய்துவிடு” என்று வேண்டிக் கொண்டான்.

தன்னைத் தரையில்தான் தன் மகன் புதைப்பான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டார். ஆனால் அந்த உதவாக்கரை மகனோ, வாழும் போதுதான் நான் என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தவறிவிட்டேன், அவர் இறந்த பிறகாவது நான் அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி, அவர் இறந்ததும், தங்கள் சொந்த மண்ணில் ஒரு சிறிய குளத்தினை உருவாக்கி அதனுள் தன் தந்தையின் பிணத்தைப் போட்டுவிட்டான்.


13. அருமகள்

இளம் நங்கை ஒருத்தியை அவளின் அண்டை வீட்டு இளைஞர்கள் இருவர் மணந்துகொள்ள விரும்பினர். கீழை வீட்டுக்காரனின் (தன் கிழக்கேயுள்ள வீட்டுக்காரன்) மகன் செல்வம் மிகுந்தவன். ஆனால் அழகற்றவன். மேலை வீட்டுக்காரனின் மகன் அழகன்; ஆனால் ஏழை. இருவரில்