பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த.கோவேந்தன், டிலிட்.,

17


புடைக்கச் சாப்பிட்டார். அவரைச் சுற்றியிருந்தவர்களெல்லாம் யாரோ ஒருவர், அவரின் சவுக்கடி தண்டனைக்கு ஆளாகப்போகின்றனர் என்பதை ஊகித்து உணர்ந்தனர். வயிறு நிரம்பியதும் அத்தகைய சுவையான உணவினை இதுவரை தனக்குப் பரிமாறிய குற்றத்திற்காகச் சவுக்கடி தண்டனை வழங்கினார் ஆளுநர் தன் மகனுக்கு.

16. சாட்டையினை ஆய

பல்லவர் ஆட்சி காலத்தில் ‘மாமல்லன்’ ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஒருமுறை அவர் ஆய்வுக்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு புதர் அருகில் வந்தார். அங்கு அழகிய சாட்டைகள் இருப்பதைக் கண்டு அவற்றில் ஒன்றையெடுத்துச் சென்றார். அந்த சாட்டையை ஆய்ந்து பார்க்க ஒரு மனிதனை தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுத்த அந்த மனிதன், "நான் தவறு ஏதும் செய்ய வில்லையே” என்று முறையிட்டான். “இனி நீ எதிர் காலத்தில் தவறுகள் ஏதும் செய்ய நேரிட்டால், சாட்டை அடியிலிருந்து உனக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்” என்று வாக்குறுதியளித்தார் ஆளுநர். பின்னர் எதிர்பாராத வகையில் அவன் ஒருநாள் தவறு செய்ய நேர்ந்தது. அந்தத் தவறுக்காக அவன் சாட்டையடிக்கு ஆளானபோது ஆளுநரிடம் “ஐயா, முன்பே இந்த தவறுக்கு நான் சாட்டையடித் தண்டனை பெற்றுவிட்டேன்” என்று சொல்லி ஆளுநர் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினான். ஆளுநரோ “குற்றமற்றவனாயிருக்கும் போது நான் உனக்கு அந்த வாக்குறுதி தந்தேன். இப்போதோ நீ குற்றம் புரிந்திருக்கிறாய்” என்று சொல்லி அவனைச் சட்டையால் அடிக்கத் தொடங்கினார்.