பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


கால்கள் உள்ளன” என்று சொல்லிப் பலிப் பொருளைக் காட்டினாள்.

மனைவி சொல்லே மந்திரம் என நினைத்த கணவனும் அவ்வாறே செய்தான். ஆனால் தெய்வமோ பலியைக் கண்டு கோபம் கொண்டது. சில நாள்களுக்குப் பின் மனைவி கணவனிடம் “உண்பதற்குக் கொடுக்க ஒன்றும் இல்லையென்றாலும், வந்த விருந்தினர்கள் அமர இரண்டு இருக்கைகளாவது இருந்தன. இப்போது அவையும் இல்லை” என்று சலித்துக் கொண்டாள்.

48. நலிந்த நல்வரவு

தங்கள் மதுக் கலயங்கள் காலியான பின்னும் நீண்ட நேரம் மதுக்கடையிலேயே அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள் இருவரை நோக்கிக் கடைக்காரர் “கொண்டல் கருத்துவிட்டது; கனமழை வரப்போகிறது; வீட்டிற்கு விரைந்து செல்லுங்கள்” என்றார். அவ் இருவரில் ஒருவன் சொன்னான் “இதோ பார், மழை வருகிறது நாம் எங்கும் போகவேண்டாம்; மழை பெய்து முடியும் வரை நாம் இங்கேயே இருப்போம்!” என்று. மழை வருவதாகவும் இல்லை. அவர்கள் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை. வெறுப்புற்றக் கடைக்காரர் மீண்டும் அவர்கள் அருகில் வந்து “முகில் கலைந்து விட்டது. இனி மழை வராது. நீங்கள் செல்லலாம்” என்றார். இதனைக் கேட்டதும் அவ் இருவரில் ஒருவன் மற்றவனிடம், “இப்போதே போக வேண்டும் என்று ஏன் கவலைப்படுகிறாய்? கவலைப்படும்படி புயல் ஒன்றும் வீசவில்லை. அமைதியாக இரு” என்றான். கடைக்காரர் செய்வதறியாது விழித்தார்.