பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


வதற்காக இரண்டு நாணயங்களோடு மதுக்கடைக்குள் புகுந்தான். மதுக்கடைக்காரன் அந்த இரண்டு காசுகளுக்குப் பிச்சைக்காரனின் திருவோட்டில் மது ஊற்றி நிரப்பினான். பிச்சைக்காரன் “இன்னும் கொஞ்சம் ஊற்றுங்கள்” என்று கேட்டான். ‘இதற்கு முன் நீ பேசியதில்லையே; இப்போது மட்டும் எப்படி பேசுகிறாய்?” என்று வியந்து கேட்டான் மதுக்கடைக்காரன். பிச்சைக்காரனோ, இதற்குமுன் என்னிடம் பணம் கிடையாது. என்னால் எப்படிப் பேசமுடியும்? இப்போதோ என்னிடம் இரண்டு காசுகள் உள்ளன. எனவே எல்லாம் மாறிப்போயின” என்றான்.

64. இங்குப் பலமாக நாறுகிறது

முதிர்வயதான செல்வன் ஒருவன் விருந்தொன்று நடத்திக் கொண்டிருந்தான். திடீரென்று விருந்தினர்கள் இடையில் காற்றை வெளியே விட்டுவிட்டான் “ஆ!” விருந்தினர்களில் ஒருவன் வியந்து கூவினான். “காற்று, போல் ஒலி எழுப்பினாலும் கடுநாற்றம் அடிக்கவில்லை” என்றான் அவன்.

“கடுநாற்றம் வீசாதது மட்டுமல்ல; அது நறுமணத்தைலம் போல் மணம் கமழ்கிறது” என்றான் வேறொருவன். புருவத்தை உயர்த்திய வண்ணம் “என்ன?” என்று வாடிய முகத்துடன் கேட்டான் செல்வன். மணமற்ற காற்றை ஒருவன் வெளிவிட்டால், அவன் உயிர் விரைவில் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதானா? நான் நீண்ட நாள் உலகில் உயிர் வாழ்வேனா?” என்றெல்லாம் மேலும் கேட்டான் அந்தச் செல்வன்.