பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சிரிக்க சிநதிக்கச் சிறுவர் கதைகள்


அவளே என்னை காணவில்லையென்று பொய் சொல்லுகிறாள்” என்று முறையிட்டான்.



92. மறதி

ஒரு மாநிலத்தின் தலைமை நீதிபதியாக ஒருவர் நியமிக்கப்பட்டார். பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், நகரவாயிலில் முடிதிருத்தகம் வைத்திருந்த ஒரு முடிதிருத்துபவனை அழைத்துவர ஆணை பிறப்பித்தார். அவ்வாறே அவனும் அழைத்து வரப்பட்டான். பின்னர் எவ்வித உசாவல் ஏதுமின்றி, மூங்கில் தடியால் 40 அடிகள் கொடுக்க கட்டளை பிறப்பித்தார். தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது நீதிபதி “நான் முன்பு ஒருநாள் உன் நிலையத்திற்கு வந்தபோது நீ என்னை தக்க மரியாதையுடன் நடத்தவில்லை” என்றார். இதனைக் கேட்ட முடிதிருத்தும் கலைஞன் ஐயா, தாங்கள் என் எளிய நிலையத்திற்கு என்றுமே வந்ததில்லையே” என்றான்.