பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

சிலேடைப் பாடல்கள்

இவர் வெளியூர்களுக்குச் செல்லும்போதெல்லாம் சொற்பொழிவு ஆற்றாத மற்ற நேரங்களில் நண்பர்களுடன் இருந்து அளவளாவி மகிழ்வார். தம்முடைய அநுபவங்களைச் சொல்வார். தம் ஆசிரியப் பெருமானுடைய புகழைப் பேசுவார். அன்பர்கள் புதிய பாடல்களைப் பாடச் சொல்வார்கள். அவர்கள் சொல்லும் பொருளை வைத்தும், ஈற்றடியை வைத்தும். உடனுக்குடன் பாடித் தருவார். அவற்றில் சிலேடைப் பாடல்களும் பல. அவற்றை அங்கங்கே விட்டுவிட்டு வந்து விடுவார். சிலவற்றையே எழுதிக் கொண்டிருப்பார். இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள் உண்டு. அவற்றில் கிடைத்த சிலேடைப் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

காபிக்கும் பழையதுக்கும்

கல்கத்தாவுக்குச் சென்றிருந்த சமயத்தில் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது பாடிய சிலேடைகள் பல. அவற்றில் ஒன்று இது.

கல்கத்தா நண்பருள் திரு. சீதாபதி (இப்போது அமரராகி விட்டார்) அவர்கள் காபிக்கும் பழையதுக்கும் சிலேடை சொல்லச் சொன்னார். (இவர் காபி அருந்தாதவர்). -

காலை உணவாகிக் கைப்பிசைய நல்லதாய்ப் பாலருந்தி வேண்டாத பான்மையால் - சீலமிகு சீதா பதியென்னும் செம்மலே, காபியினை ஒதாய் பழையதென் று.