பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ புத்தகத்துக்கும் வேசிக்கும் கட்டுதலால் மேல்துணியைக் காட்டிக் கவர்தலால் ஒட்டுப்பொருள் சேர்முன் னுரையினால்-தொட்டபக்கம்

மாற்றிப் புரட்டுதலால் வாசித்த லால்வேசி தோற்றிய புத்தகமாச் சொல்.

வேசிக்கு: கட்டுதலால்-அணைப்பதனால். மேல் துணியைக் காட்டிக் கவர்தலால்-தான் அணிந்த ஆடையலங்காரத்தைக் காட்டி உள்ளத்தைக் கவர்வதால். ஒட்டு பொருள் சேர் முன் உரையினால்-தனக்கு ஒட்டுகின்ற செல்வத்தைச் சேர்ப்பதற்குரிய முன் பேசும் இங்கிதமான வார்த்தைகளால் தொட்ட பக்கம் மாற்றிப் புரட்டுதலால் - தான் ஒரு முறை தொடர்பு கொண்டவரை மாற்றி விட்டுப் புரட்டுச் செய்வதால். வாசித்தலால் - வாசனை வீசுவதால். -

புத்தகத்துக்கு: கட்டுதலால்-பைண்டு செய்வதால். மேல் துணியைக் காட்டிக் கவர்வதால்-கலிகோ பைண்டென்று காட்டி அதிகப் பணம் வாங்குவதால். ஒட்டு பொருள் சேர் முன் உரையினால்-நூலினுள்ளே உள்ள பொருளை இன்னதென்று சொல்லும் முகவுரையினால். தொட்ட பக்கம் மாற்றிப் புரட்டுதலால்-படிக்கும்போது முதலில் எடுத்த பக்கம் முடிந்தவுடன் அந்தப் பக்கத்தை மாற்றிப் புரட்டி அடுத்த பக்கத்தைப் படிக்கத் தொடங்குவதால், வாசித்தலால் . படிப்பதனால்,

இரும்புக்கும் கரும்புக்கும்.

வெட்டி எடுத்தலால் மேல்ஆலை பிற்பு கலால் ஒட்டு கரும்பொன் றுறுபெயரால் -கட்டுமதன் பல்வடிவம் பெய்து பதியவில் லாகுதலால் நல்லிரும்பு தான்கரும்பா நாட்டு.