பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 சிரிக்க வைக்கிறார் கி.வாஜ

படுகிறேன். அதைத்தான் நீயும் வலியுறுத்துகிறாயோ? என்று சிரித்துக் கொண்டே நன்றி கலந்த பார்வையோடு படிகளில் இறங்கினார். | - . . . . .

அப்படியே எடுத்துக் கொண்டு செல்கிறாயா?

அல்லயன்ஸ் மணி தன்னுடைய புதல்வருடன் ஒரு சமயம் இவரைக் óf了@ös இவர் வீட்டிற்குச் சென்றிருந்தார். பேசிக் கொண்டு இருக்கையில் காபி. கொடுத்தனர். திரு. மணி அதைச் சாப்பிட்டு விட்டு அருகில் டம்ளரை வைத்து விட்டு மீண்டும் அவருடைய குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இவர் தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வந்து குனிந்து அந்த டம்ளரை எடுத்தார். அதற்குத் திரு.மணி, "மாமா, நாங்கள் எடுத்துச் செல்கிறோம். நீங்கள். அதை எடுக்க வேண்டாம்" என்று கூறினார். அதற்கு இவர் "அப்படியே எடுத்துச் செல்லலாம் என்று பார்க்கிறாயா?" என்று நகைச்சுவையுடன் கேட்ட போது அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

- செல்லப்பா

- ஒரு சமயம் டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் - அவர்கள் இவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது - திரு.செல்லப்பனைக் கண்டதும் இவர், "செல்லப்பா என்றால் வந்து கொண்டே இருக்கிறீர்களே. சொன்னதைக் கேட்க மாட்டீர்களோ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். உடனே சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் சிரித்து விட்டார். -

r வைதிகர்ா? . . .

ஒரு சமயம் இவரது நெடுநாளைய குடும்ப நண்பர்

ஒருவர் இவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இவர், "உன் மகனுக்கு எப்போது திருமணம்?" என்று

10