சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ - 26;
கேட்டார். அன்பர், "அது இப்போது காலி வீடு' என்றார்." என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? பெரிய சிவபக்தர் வீட்டைக் காலி வீடு என்கிறீர்களே ! நியாயமா?" என்று இவர் கேட்டார்.
இடம் கொடுக்க வேண்டாம்
ஒரு பெரியவர் இவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவரை இவரும் மனைவியும் பணிய வந்தார்கள். இவருடைய மனைவி இவருடைய இடப். பக்கத்திலிருந்து நமஸ்காரம் பண்ண வந்தாள். பெரியவர், "இடம் வேண்டாம்; வலப் பக்கம் வந்து வணங்குங்கள்" என்றார். உடனே இவர், "ஆமாம், பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது; சிவபெருமான் ஒருவன்தான் கொடுக்கலாம்" என்றார். (இடம் - சலுகை, இடப் பக்கம்). -
கண்டு கொண்டு
யாழ்ப்பாணத்தில் பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை என்ற பெரிய புலவர் ஒருவர் இருக்கிறார். ஆழ்ந்த புலமை உடையவர். அவருக்கும் இவருக்கும் நட்புறவு உண்டு. யாழ்ப்பாணத்தைச் சார்ந்த திருநெல்வேலி என்ற இடத்தில் அவர் இருந்து வருகிறார். அவர் கந்த புராணம் தட்ச காண்டத்திற்கு உண்ர எழுதி வெளியிட்டிருக்கிறார். -
ஒருமுறை இலங்கைக்கு இவர் சென்றிருந்தபோது, பண்டிதமணியைப் பார்த்து விட்டு வரலாம் என்று அவர் வீட்டுக்குப் போனார். அப்போதுதான் அவர் தட்சகாண்ட உரையை எழுதி முடித்திருந்தார். இருவரும் rேம விசாரணை செய்து கொண்டார்கள். "நான்