பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 24

வந்தது?" என்றான் அவன். (பால் காகிதம், கரடாக் காகிதம் என்று இரண்டு வகை உண்டு. சுத்த வெள்ளையாக இருப்பது பால் காகிதம்.)

தேதியூர்

தேதியூர்ச் சுப்பிரமணிய சாஸ்திரிகள் மகா மேதை. வட மொழியில் வல்லவர். புராண இதிகாசப் பிரசங்கங்கள் செய்கிறவர். கடைசிக் காலத்தில் அவர் அதிகமாக வெளியூர்களுக்குப் போகவில்லை. கோபம் உள்ளவராகையால் அவரை வைத்துச் சமாளிப்பது அரிது என்று பலர் அவரை அழைப்பதில்லை. -

மயிலை பக்த ஜனசபை என்ற ஒரு சபையை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக இருந்தார், கி.வா.ஜ. வாரந்தோறும் பஜனை நடைபெறும். ஆண்டுக்கு மூன்று கல்யான உற்சவம் நடைபெறும். ராதா கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம் என்ற மூன்று. பஜனைகள், கச்சேரிகள், உபந்நியாசங்கள் அந்தக் காலங்களில் நடைபெறும். -

ஒரு முறை தேதியூர்ச் சுப்பிரமணிய சாஸ்திரிகளைப் பேசுவதற்கு அழைத்திருந்தார். அவர் வந்து பேசினார். பேச்சின் முடிவில், "நான் இப்போது காலிதான். எப்போது அழைத்தாலும் வருகிறேன்" என்றார். இவர் நன்றியுரை கூறினார். அப்போது சொன்னது: "ஆண்டவனுடைய புகழைப் பரப்பும் உத்தியோகத்தைச் செய்யும்படி பகவான் இந்தப் பெரியவர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறான். இன்ன தேதி, இன்ன ஊர் என்ற வரையறையில்லை. எல்லாத் தேதியும் எல்லா ஊரும் அவன் புகழ் பாடும் உரிமை இந்தத் தேதியூர்ச் சாஸ்திரிகளுக்கு உண்டு. இவர் தம்மைக் காலி என்று சொல்லிக் கொண்டார்; காலி என்றால் பசு. இது மந்தைவெளி, பசுக்கள் உள்ள கோகுலம். கண்ணன்